
நம் சிறு வயதில் ஒரு முறையாவது நமது பாட்டியின் சமையலை இருசித்திருப்போம் இல்லையா, அப்படி நமக்கு உணவை ஊட்டி விட்ட பாட்டிகளில் பல இரகங்கள் உண்டு, அதில் ஒரு இரக பாட்டியைத்தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம். வாருங்கள் பாட்டியோடு உணவு உண்ண செல்லலாம். பார்த்து வாருங்கள், இந்த பாட்டி சிறிது கோபப்படக்கூடிய ஆள், எப்போது என்ன செய்வாள் என்றே தெரியாது.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாளெனின் வாளாக்கும் நாள்.(குறள் 336)
மாவுப் பொட்டலம்:

தாழ்வாரத்தின் திண்ணையில் வெற்றிலையைக் குதப்பிய வண்ணம் மறுவாய் வெற்றிலையை ஒரு சிறிய உலக்கையில் உரலால் குத்திக் கொண்டிருந்தாள் கருமி.
வயது 80க்கு மேல் தாண்டிய போதிலும் அவளின் பேச்சிலும் உடல் பலத்திலும் தேய்மானமே இல்லை, அவளின் செட்டுப் பல்லைத் தவிர. கருமிக்கு ஒரு கெட்ட குணம் உண்டு அதுவும் சோற்றின் மீது . இந்தக் கெட்ட குணம் காய்கறிகளால் வருவதில்லை மாறாக கறியால் வருவது. சிறு வயதிலிருந்தே கருமிக்கு அசைவத்தில் ஏகப்பிரியம். அதனாலேயோ என்னவோ கறி சமைக்கும்போது மட்டும் தன் வீட்டில் யாரையும் அண்ட விட மாட்டாள் அதில் அவளின் சொந்தங்கள் கூட இடம் பெறும்.
அசைவத்தைத் தவிர அவளுக்கு வேறொரு பொருளிலும் பிரியமுண்டு, தன் அம்மா வீட்டில் இருந்து கொண்டு வந்த ஒன்றுதான் அது. ஆசையாக தன் அம்மாவின் வீட்டில் இருந்து கொண்டு வந்த பொக்கிஷம் அது. ஆனால் இன்று அது குப்பைப் பொருளோடு ஒன்றாகக் கிடத்தப்பட்டதைப் பார்த்துக்கொண்டே தான் இந்நேரம் வெற்றிலையைக் குத்திக் கொண்டிருந்தாள் கருமி.
என்றும் போலவே மாலை வேளையில் கருமியின் பேரன் வண்டியில் கூடையைத் தொங்க விட்டுக் கொண்டே "எத்தனை வேணு மா?" என்று வண்டி எடுத்த வண்ணம் கேட்டான்.
"மூனு போதும்டா உங்க அப்பாயிட்ட கேளு , இன்னைக்கும் அதை சாப்பிடுவாங்களா இல்ல பட்டினிதானான்னு".என்று வீட்டிற்குள் இருந்து கத்தினாள் கருமியின் மருமகள். கருமி இதையெல்லாம் கேட்டுக் கொண்டே மறுபடியும் அந்தப் பழைய பொருட்கள் கிடத்தப்பட்ட அறையை நோக்கினாள்.அம்மா சொல்லி முடித்த உடனேயே வண்டி செலுத்தினான் ராமு. ஆனால் இன்று கொஞ்சம் தாமதம். பொட்டலம் முடிந்து விட்டது வீட்டிற்கு வந்து தன் அம்மாவிடம் திட்டை வாங்கிக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான் ராமு. அன்று இரவு அனைவருக்கும் உப்புமாவே என்று அந்தச் சமையலறை புகுந்து வந்த காற்று தூதாக அனைவரது மூக்கிலும் சென்றடைந்தது. அனைவரும் அந்த உப்புமாவை சாப்பிட்டு முடித்துவிட்டு படுக்கைக்கு விரைந்தார்கள், பாட்டியையும் பேரனையும் தவிர.
அனைவரும் உறங்கிய நேரமாகப் பார்த்து இருவரும் அந்த பழைய அறையின் முன் வந்து நின்றனர். சாவிக்கொத்தில் இருந்து ஒரு சாவியை தேர்ந்தெடுத்து தன் பேரனை அந்த அறையைத் திறக்கச் சொன்னாள் கருமி.
மறுநாள் காலையில் அந்த தாழ்வாரத்திண்ணையில் சமையல் முடிக்கப்பட்டு பலகாரங்கள் தட்டில் அடுக்கப்பட்டு இருப்பதையும், பேரனை மடியில் தூங்க வைத்துக் கொண்டு இட்டலியை எடுத்துக் கொண்டிருப்பதையும் தூங்கி எழுந்து வந்த மருமகள் கண்டு வியந்தாள். "இப்படி இருந்தா வீடு உருப்புட்டுரும் டி ஆத்தா, சரி விடு வடக்கு தெரு போயி எங்க அண்ண அப்புறம் தங்கச்சிய கூட்டிட்டு வா"என்று தன் மாமியார் சொன்னவுடனேயே "இந்தக் கெழவியா இப்படி சொல்லுது" என்று மனதிற்குள் எண்ணியவாறே கிழவி கூறியதைச் செய்ய கிளம்பினாள்.
காலை ஒரு 8 மணி இருக்கும் தன் அண்ணன் ,தங்கை ,மருமகள் ,மகன் ,பேரன் ஆகியோருடன் சேர்ந்து அந்தத் தாழ்வாரத்தில் ஒரு பெரிய கறி விருந்தே நடந்தது. மருமகள் தன் மாமியாரின் இந்த செயலைக் கண்டு விழுந்தாள்.
"வயது 80ஐ தாண்டியும் இந்த கெழவி எப்புடி எல்லாம் செஞ்சா, அதுவும் தான் சொந்தங்களையும் கூப்பிட்டு சாப்பாடு போடுறாளே"என்று எண்ணிக் கொண்டிருந்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே தன் வாயிற்குள் இட்டலி போவதை உணர்ந்து,"இந்த கெழவிக்கி எப்புடிடா மாவு கெடச்சுச்சு"என்று எண்ணிக்கொண்டே தன் மகனைப் பார்த்து கேட்டாள். இட்டலி கையோடு அந்தத் திண்ணை ஓரத்தில் கழுவப்பட்டு கிடத்தப்பட்ட அந்த ஆட்டுக்கல்லை காண்பித்தான் அவன்.

முற்றும்………
கருத்துக்களை இங்கு பதிவிடவும்.
அடுத்த வாரம் வேறொருக் கதையின் மூலம் உங்களைச் சந்திக்கும் வரை உங்கள்..
அ. கண்ணன்

உங்களுக்கு தெரியுமா?
திணைகளுக்கு ஏற்ப உணவு முறைகள்:

பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய 7 பாரம்பரிய சிறுதானியங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்:
1. தினை:

ஆரோக்கிய நன்மைகள்:
நரம்பு மண்டலம்: இதில் உள்ள வைட்டமின் பி1 நரம்புகளைப் பலப்படுத்தி, ஞாபக மறதி நோயைத் தடுக்கிறது.
சரும ஆரோக்கியம்: அமினோ அமிலங்கள் அதிகம் இருப்பதால், முன்கூட்டியே தோலில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து இளமையைத் தக்கவைக்கும்.
2. கம்பு:

ஆரோக்கிய நன்மைகள்:
உடல் குளிர்ச்சி: கடுமையான கோடை வெப்பத்தைத் தாங்க உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். கம்மங்கூழ் சிறந்த இயற்கை குளுக்கோஸ் ஆகும்.
இரும்புச்சத்து: அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கொண்டது. ரத்த சோகையை (Anemia) முற்றிலும் குணமாக்கும்.
3. கேழ்வரகு / ராகி :

ஆரோக்கிய நன்மைகள்:
எலும்பு பலம்: அனைத்து தானியங்களையும் விட இதில் கால்சியம் சத்து மிக அதிகம். வளரும் குழந்தைகள் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்து.
உடல் எடை குறைப்பு: இதில் உள்ள 'டிரிப்டோபான்' பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவும்.
4. சோளம்:

ஆரோக்கிய நன்மைகள்:
செரிமானம்: இதில் உள்ள அசாத்தியமான நார்ச்சத்து (Dietary Fiber) மலச்சிக்கலை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்: கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
5. வரகு:

ஆரோக்கிய நன்மைகள்:
சர்க்கரை நோய் கட்டுப்பாடு: இதன் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிகக் குறைவு. ரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று உயர்வதைத் தடுத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது.
உடல் கழிவு நீக்கம்: கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
6. சாமை:

ஆரோக்கிய நன்மைகள்:
ஹார்மோன் சமநிலை: பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையைச் (PCOS) சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.
ஆண்மைப் பெருக்கி: ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்குத் தாது பலத்தைத் தரும்.
7. குதிரைவாலி:

ஆரோக்கிய நன்மைகள்:
நோய் எதிர்ப்புச் சக்தி: இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் துத்தநாகம் (Zinc) அதிகம் உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பல மடங்கு உயர்த்தும்.
எளிதான ஜீரணம்: காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் போது குதிரைவாலி கஞ்சி வைUnitதுக் கொடுத்தால் எளிதில் ஜீரணமாகி உடலுக்குத் தெம்பைக் கொடுக்கும்.
விளையாட்டுக் களம்:

தானியத்தின் பெயரைக் கண்டுபிடிக்க.
சிறகு:
சென்ற வீழ்த்தப்பட்ட இராணி சிறுகதையின் வாயிலாக கேட்கப்பட்ட விளையாட்டுக் களத்தின் விடை,
“திருவெண்காடு”
சரியாக விடையளித்தவர்,
தாரணி செ (தருமபுரி)