'அறநெறி' என்றால் என்ன?
'அறநெறி' என்ற இச்சொல், உலகின் மிகப் பழமையானதாகவும் காலத்தை வென்று நிற்கும் மொழிகளில் ஒன்றான தமிழில் வேரூன்றி உள்ளது. 'அறம்' மற்றும் 'நெறி' ஆகிய இரண்டு வேர் சொற்களின் இணைப்பாக 'அறநெறி' என்று தோன்றியுள்ளது.
'அறம்' என்பது நற்பண்பு, ஒழுக்கம் அல்லது அறவியல் நெறிகளைக் குறிக்கிறது. கூகுளின் (Google) வரையறைப்படி, இது நேர்மை நடத்தை, கடமை மற்றும் நற்செயல்கள், ஈகை, நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது. பெரும்பாலான தமிழர்களுக்கு, தமிழ் மொழியின் பரந்த இலக்கியப் பெருங்கடலிலிருந்து முதலில் கற்றுக்கொள்ளும் சொல்லாக 'அறம்' விளங்குகிறது. ஔவையார் இயற்றிய 'ஆத்திச்சூடியே', குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் முதல் இலக்கியப் படைப்பாகத் திகழ்கிறது; இதற்கு, அதன் எளிமையும், தமிழ் எழுத்துகளின் வரிசைப்படியே அறநெறிகளைப் போதிக்கும் தனித்துவமான முறைமையுமே காரணமாகும்.

“அறம் செய்ய விரும்பு”
என்ற அப்பாடலின் முதல் வரியே “நற்செயல்களைச் செய்ய விருப்பம் கொள்” என்று பொருள்படுமாறு அமைந்து, மனித வாழ்வில் 'அறம்' வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
'நெறி' என்பது வழி, வழிமுறை, கோட்பாடு, விதி அல்லது நடத்தையைக் குறிக்கும் ஒரு தமிழ்ச் சொல்லாக விளங்குகிறது. கூகுளின் வரையறைப்படி, இது ஒரு பௌதிக வழியையும் (physical path), ஒரு தார்மீக அல்லது அறவியல் சார்ந்த செயல்முறையையும் விவரிக்க வல்லது. 'நெறி' என்ற சொல், ஒரு செயலைச் செய்வதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையைக் குறிக்கிறது; பெரும்பாலும், இச்சொல் எதனுடன் இணைந்து வருகிறதோ, அந்தச் சொல்லின் தன்மையைப் பொறுத்தே இதன் பொருள் அமைகிறது.
இவ்விரண்டும் இணைந்து வரும் 'அறநெறி' , நற்செயல்கள் புரிவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட வழியைத் தேர்ந்தெடுத்தல் அல்லது அறம் சார் வாழ்க்கை முறையை குறிக்கிறது.
நாங்கள் தான், சுயநலன் பாராமல், வாழ்வின் நெறிகளையே மூச்சாகக் கொண்டு இயங்கி வரும் 'அறநெறி' குழு! தமிழ் இலக்கிய நடையைப் பின்பற்றி, மெய்ம்மை நெறிமுறைகள், நோக்கம் மற்றும் நேர்மையால் ஒன்றிணைந்துள்ளோம்!
வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தாலும், மாறுபட்ட ஆளுமைகளைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொருவரும் தமக்கே உரிய தனித்துவத்துடன் திகழ்ந்தாலும்—எங்கள் கொள்கைகளின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையே எங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்! இதுவே எங்கள் குழுவைச் சிறப்பானதாக ஆக்குகிறது. எங்களுக்கிடையேயான வேறுபாடுகளை அரவணைத்து ஏற்றுக்கொண்டு, நாங்கள் தனித்துவமான ஒன்றை உருவாக்குகிறோம், அனைத்தையும் ஒரு சிறப்புமிக்க முறையில் ஒன்றிணைக்கிறோம், மனங்கமழும் நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பல்வேறு மலர்களைப் போன்று!
'அறநெறி' என்பது படைப்பாற்றல் மலரும் இடமாகவும், புதிய சிந்தனைகள் அன்புடன் வரவேற்கப்படும் களமாகவும் திகழ்கிறது. ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்கும் அதே நேரத்தில், நமது நிறுவனம் மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் துணைபுரியும், புதிய திட்டங்கள், முன்னெடுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் வரவேற்கிறோம்!
எங்களின் முன்னெடுப்புகளுள் ஒன்றாக, வாரம் இரு முறை அதாவது திங்கள் காலை 6 மணிக்கும் வெள்ளி மாலை 6 மணிக்கும் மூன்று எழுத்தாளர்களால் படைக்கப்பட்டச் செய்தி மடலின் வாயிலாக தங்களைக் கதை உலகம் காண கூட்டிச் செல்ல காத்திருக்கும்,
உங்கள்
ஆதித்யாமதி (ஆதி)
பழங்காலத் தமிழ் வரலாற்றின் திருப்பங்களையும், அன்றாட வாழ்வின் எளிய அழகையும், வாசகர்களுடன் இணைந்து கதையாக நெய்யும் புதிய தலைமுறை இளம் எழுத்தாளர்.
கண்ணன் அ
சமூகம் சார் பிரச்சனைகளையும், வாழ்வின் இனிய தருணங்களையும், கிராமிய நடையையும் மையமாகக் கொண்டு கதைகள் புனையும் இளம் எழுத்தாளர்
ஹரி பிரசாத் சி (ஹரி)
மனித மனத்தில் நிரம்பியிருக்கும் மனிதத்தை கண்கள் முன்னே கொண்டு வர முற்படும் இளம் எழுத்தாளன்.
வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் இனிவரும் வாரங்களில்!
